அறிமுகம் 

தெற்காசிய சர்வதேச உயர்கல்வி நிறுவனம்

தெற்காசிய சர்வதேச உயர்கல்வி நிறுவனம், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மாற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக்கான முதன்மை கல்வி, உளவியல் ஆலோசனை பற்றிய சிறப்புக்கல்வி, மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகிய வற்றில் கல்விசார் டிப்ளோமா நடாத்தும் ஒரு நிறுவனமாகும். எங்கள் நிறுவனமானது மூன்றாம் நிலை தொழிற் பயிற்சி கல்வி கழகத்தின் கீழ் மூன்றாம் நிலை தொழிற்கல்வி பயிற்சி நிறுவனமாக இலக்கம் P01/0540, P09/0162, P04/0152, P07/0094, P12/0189 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் நிறுவனம் நடாத்தும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக்கான டிப்ளோமா கல்வி நெறியை ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக்கான தேசிய ஒருங்கினைப்புக் குழுவினால் ஒரு தேசிய மட்ட டிப்ளோமா பாட நெறியாக அனுமதிக்கப்பட்டு, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தில் இலக்கம் CS/30 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய தொழிற் பயிற்சி தகுதி-நான்காம் தரத்திற்கான பாடநெறியையும் ஒழுங்கு படுத்தியுள்ளது.

சிறுவர் செயலகத்தினால் அனுமதிக்கப்பட்ட ஒரு வருட ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக்கான டிப்ளோமா பாட நெறியை வெற்றிகரமாக முடிக்கும் ஆசிரிய மாணவர்கள் மூன்றாம் நிலை தொழிற் பயிற்சி கல்வி ஆணைக் குழுவினால் ஒழுங்கு படுத்தியுள்ள நான்காம் நிலை (NVQ-Level/4) தேசிய தொழில் பயிற்சி தகைமையை பெறுவார்கள்.

இத் தகைமை இலங்கையில் ஒரு முன் பள்ளி ஆசிரியராக சேவை செய்வதற்கு ஆசிரியர்க்கான ஒரு தொழில் முறை தகுதி பெறுவதற்கும், ஒரு முன் பள்ளியை ஆரம்பிப்பதற்கான  ஒரு தொழில் முறை தகுதியுமாகும். தமிழ் மொழி மூல டிப்ளோமா தாரர்களுக்கு பல தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. 

தேசிய தொழில் பயிற்சி தகைமை (NVQ) உலகின் எல்லா நாடுகளிலும் தொழில் தகைமையாக ஏற்றுக் கொள்ளபட்டுள்ளது. இத் தகைமை வெளி நாட்டு பயனத்திற்காண வீசா பெறுவதற்கும் வேலை அனுமதி பெறுவதற்கும் தேசிய தொழில் பயிற்சி தகைமை கட்டாய தகுதி யாகும்.இப் பாட நெறி நுகேகொட மற்றும் கண்டி கல்வி நிலையங்களில் தமிழ் மொழி மூலம் நடைபெறுகின்றன.தற்போது கண்டி, காலி, இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பண்டாரவளை மாவட்டங்களில் ஆறு கிளைகளை நிறுவியுள்ளது.

 

 

எங்கள் புதிய மையங்கள்

யாழ்ப்பாணம்

வவுனியா

கிளிநொச்சி

திருகோணமலை

மட்டக்களப்பு

விண்ணபப்படிவம்